Wednesday, August 31, 2011

மாற்றம் பெறுகிறதா தமிழ்ச்சமூகம்?


மூவர் மீதான தூக்கு தண்டனைக்கு எதிரான போரட்டங்களில் தம்மை இணைத்துக்கொண்டு  அரசியல் சாராது களமாடிய இளைஞர்களும் யுவதிகளும் இன்றைய தமிழ்ச்சமூக சூழலில் முக்கியமான கவணம் பெறுகிறார்கள். இந்த இளம் தலைமுறை தமிழர்களின் தன்னலமற்ற ஈடுபாடானது பாராட்டுக்களை தாண்டிய கவனம் பெறக் காரணம் இந்த எழுச்சி முறையாக பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆவணப் படுதப்படுமானால் இனிவரும் காலங்களில் இன எழுச்சி மட்டுமல்லாது சமூக பிரெச்சணைகள் தொடர்பான விடயங்களிலும் பேருதவியாய் இருக்கும்.

இந்த போராட்டங்கள் எழுப்பியிருக்கும் முக்கியமான கேள்வி இளந்தமிழ்ச்சமூகம் அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது விடயங்களில் தங்கள் பங்களிப்பை உறுதிபடுத்துவதற்காண திசையில் பயணிக்கதொடங்கிவிட்டதா? அல்ல அத்தகைய காலகட்டத்தை அடைந்து விட்டதா? எண்பதாகும். ஏனெனில் இந்த போராட்டத்தை வழிநடத்தியவர்களும், வழிநடந்தவர்களும், சமுகம் சார்ந்த எல்லா பொறுப்புகளையும் அரசியல்வாதிகளிடம் தாரைவார்த்துவிட்ட, தன் சொந்த நலண்களில் மட்டுமே அக்கறையுடைய நடுத்தர குடும்பங்களிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்ட பிள்ளைகள். இத்தனை காலமாக பெற்றொர் வழி நடந்த இவர்களின் தடம் மாறியிருப்பது தமிழ் சமுகத்திற்க்கு ஆரோக்கிய ஆரம்பமாகுமா? குறிப்பு- போராட வந்தவர்கள் மொத்த தமிழர்களில் வெகுசிலரே என்பதை கருத்தில் கொண்டே எழுதப்பட்டது.

No comments:

Post a Comment