Thursday, February 09, 2012

நீரும் தமிழரும் – 4


இனிவரும் பகுதிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை காண்போம்! ஆங்காங்கே பழந்தமிழர் தம் அறிவையும் நம் தவறுகளுக்கு மாற்றாக அவர்கள் கைகொண்ட எளிய முறைகளையும் காணலாம்! அதை செய்! இதை செய்! என்ற அறிவுரைகள் இருக்காது. தவறுகள் இருக்கும், அதன் விளைவுகள் இருக்கும்.ஓர்ந்து பார்த்து செய்யவேண்டியதை முடிவு செய்து செய்யவேண்டியது அவரவர் விருப்பம். பழம்பெருமைகள் இருக்காது என்பதால் பதிவுகளின் சுவையாரம் குறையலாம்! ஆனால் பழம்பெருமை பேசிப்பேசி வெறும் பேச்சோடு நின்றுவிடுகிறோமே! செயல்படுவது யார்? செயல்படாதிருந்தால் நம் பெருமை யார் பேசுவார்?

நீரும் தமிழரும் – 3


சென்ற பதிவில், நதி நீரில் தமிழர் தம் அறிவியல் பார்த்தோம். இங்கு நீரில்லா தமிழர்களின் வாழ்வியல் பார்க்கலாம். அதென்ன நீரில்லா தமிழர்கள்? அக்கால தமிழகத்திலுமா நீருக்கு குறைவு ? காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தமிழ் கண்டதோர் வைகை, என மேவி ஓடிய ஆறுகளின் பூமியில் தண்ணீர் இல்லையா? என்ன உளறல் இது? உளறல் அல்ல! உண்மையே!  ஆம், தமிழர் நிலப்பரப்பு ஒன்றும் பஞ்சமே காணாத பூமியல்ல! இங்கும் பஞ்சங்கள் வந்ததுண்டு, ஆனால் அதை தம் அறிவால் வென்றவர்கள் தமிழர்கள்.
“கடலருகே வீற்றிருந்தும் கடுந்தாகம் வரும்பொழுதே
கடவுளெனும் ஒருவனது கைசரக்கு நினைவுவரும்…
……கடல் நீரே குடிநீராய் கடவுளவன் படைத்திருந்தால் 
அடிநீரை தேடி எந்த அரசாங்கம் செலவு செய்யும்
இந்த வரிகளுக்கு சொந்தகாரர் கண்ணதாசன்! நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வரிகள் இவை.

நீரும் தமிழரும் – 2


சென்ற பதிவில் நீர் வழி பாதைகளில் ஒரு விஞ்ஞானம் இருந்ததாக கூறினேன் அல்லவா? அது என்னவெனில் ஒவ்வொரு ஏரி, கண்மாய் , மற்றும் குளங்களில் (அதாவது நீரை தேக்கி வைக்கும் இடங்களில் ) நீர் துறை என்ற ஒன்று இருக்கும், அதன் வழியாகவே நீர் அடுத்த இடத்திற்கு ஓடும்! அப்படிப்பட்ட துறைகளில் மதகு வைத்து அடைப்பார்கள்(நீரை தேக்கி வைக்க). இந்த மதகுகளில் தான் ஒரு விஞ்ஞானம் இருந்தது. கடைமடை பகுதிகளுக்கும் நீர் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த முறை பயன்படுத்தப்பட்டது.

நீரும் தமிழரும் – 1


தண்ணீர்! தமிழர்! இரண்டும் உருவான காலந்தொட்டே தொடர்புடைய வார்த்தைகள். நீரே நம் வாழ்விடங்களை தீர்மானித்திருக்கிறது, நம் வாழ்க்கை  முறைகளை தீர்மானித்திருக்கிறது. இன்றைய நிலையில் நம் எதிர்காலத்தையும் தீர்மானிக்கவிருக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நீருக்கு தமிழர்களாகிய நாம் எத்தகைய கவனம் அளித்திருக்கிறோம்/அளித்திருக்கவேண்டும் என்பதை பற்றித்தான் இனி வரும் பத்திகளில் பார்க்கப் போகிறோம்.(நீர் பற்றிய சமகால அரசியல் சூழலோ,மொழி வாரி வஞ்சனைகளின் ஆராய்ச்சியோ இல்லாது, தண்ணீர் மீதான தமிழர்களின் கடந்த/சம/எதிர்கால ஆளுமைகள் பற்றிய சுயபரிசோதனை மட்டுமே இந்த பதிவின் நோக்கம்)

சமூக வலைதளங்களில் காமம்-விபச்சாரம் எனும் பழந்தொழில் - ஒரு அலசல்


ஒரு கருத்து மோதல்!என் பதிவுலக நண்பர்களுடன்! எது பற்றி? காமம் பற்றி ! காமத்தை கீச்சர்(Twitter),முகநூல்(Facebook) போன்ற சமூக வெளிகளில்  அப்பட்டமாக எழுதலாமா என ?! அப்படி எழுதுவதால் பெண்கள் குறிப்பாக பதிவுலகில் வாழும் பெண்கள் நேரடியாக ஆண்களால் தரக்குறைவாக பார்க்க/கேட்கப் படுகிறார்கள் என்பது குற்றச்சாட்டு. இதன் விளைவாக எழுந்த கருத்து பரிமாறல்கள் மெல்ல திசை மாறி, விபச்சாரம் பற்றி திரும்பியது.இதில் விபச்சாரம் என்பது ஒழிக்கப்படவேண்டும் என்றும், பெண்ணின் உடலை ஒரு வியாபார பொருளாக பாவிக்கும் அவலம் மாற வேண்டும் எனவும், பெண்ணை சக உயிராக பாவிக்க வேண்டுமே அன்றி காம இச்சைக்கான ஒரு பொருளாக பார்க்க கூடாது என்றும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த கருத்து வரையில் எனக்கும் உடன்பாடுதான்! ஆனால் இன்னும் சில கருத்துக்கள் மொழியப்பட போய்த்தான் இப்படி ஒரு பதிவை நான் எழுதவும் நீங்கள் படிக்கவும் வேண்டியதாகிவிட்டது.

சில்லரை வணிகம்-உள்குத்துகள்


இதை ஏன் எதிர்க்கிறார்கள்.கொஞ்சம் பாக்கலாமா? வாங்க.,
முதல் பதிவில் சொன்ன அமைப்புசாரா தொழில்,அதுதாங்க நுகர்வு சங்கிலி,இதை ஒட்டுமொத்தமா சில்லரை வணிகம் அழிச்சிடும்,அப்படின்னு குற்றச்சாட்டு,அது உண்மையா அப்படின்னா? இல்ல,அழிக்காது,ஆனா வலுவிழக்க செய்யும். சரி இந்த வணிகர்கள் சங்கம் இத ஏன் இவ்வளவு வலுவா எதிர்க்கிறாங்கன்னா,வணிகர் சங்கங்களை பொருத்தவரை முக்குகடை அண்ணாச்சி கூட அதுல உறுப்பினரா இருந்தாலும்,பொறுப்புல இருக்குற எல்லாரும் அந்த இரண்டாவதா சொன்ன இடைத்தரகர்கள் தான்.அடி மடியில் நேரா கைய்ய வச்சா கத்த மாட்டாங்களா என்ன? அப்படி ஒரு பிரிவையே இந்த பேரங்காடிகள்(walmart மாதிரி கடைகள்) ஒழிச்சிடும்.இது உடனடி நிகழ்வா இருக்கும்.அதுனாலதான் இவ்ளோ சத்தம். அதுக்காக நல்லதுதானே என்று நினைக்காதீங்க,படிப்படியா என்ன நடக்கும்னு யோசிச்சா பயமா இருக்கும்(முல்லை பெரியாறு உடைந்தா என்னவெல்லாம் நடக்கும்னு சேட்டன்கள் போடுற பட்டியல விட கிலியேற்படுத்தும்) ஆனா அது எல்லாம் நடக்கலாம். அனுமானம்தான்.நடக்கலாம்.

சில்லரை வணிகம்-அப்படின்னா என்ன?


சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு! இன்று இந்திய எல்லைக்குள் ஒரு உள் நாட்டு கழகத்தையே ஏற்படுத்தி இருக்கும் விடயம். இதில் அப்படி என்னதான் இருக்கு? கொஞ்சம் பார்ப்போம்.
முதலில் சில்லரை வணிகம் அப்டின்னா என்ன?
அதான் பேருலயே இருக்கே,அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள்,மொத்தமா கொள்முதல் செய்து வைக்க முடியாம அப்ப அப்ப வாங்க கூடிய பொருட்களுக்கான சந்தை.