Thursday, July 19, 2012

கோவை - சென்னை : கவுஹாத்தி தொடர்வண்டிப் பயணம்

ஊரோடிய கதைகளில் சொன்னது போல் "அலுவல்கள் சாராத என் பயணங்கள் எதுவும் பயணிக்கத் தொடங்கும் கடைசி நொடி வரை நிச்சயமற்றதே" என்ற மெய்வாக்கை பொய்யாக்கியே தீருவது என்ற பெருமுயற்சியோடு, ஒரு வியாழக்கிழமை IRCTC Tatkal பயணச்சீட்டு முன்பதிவு செய்ய பல் விளக்கியபடி கணினி முன்னால் அமர்ந்திருந்தேன். IRCTC "cache" மூலமே பெரிதும் இயங்குவதால் எல்லாப் பக்கங்களையும் முன்னமே ஒரு எட்டு எட்டிப்பார்த்து  வைத்திருந்தேன். வெள்ளிக்கிழமை கோவை பயணம். முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்வது தான் பெரிதும் பிடிக்கும் என்றாலும், மனது இப்போதெல்லாம் "சௌகரியம்" பார்க்க தொடங்கிவிடுகிறது. புறச் சூழலை அலட்சியப்படுத்திவிட்டு வாழ்வதென்பது "பேச்சிலர்" வாழ்வின் இறுதிகாலத்தில் முடிந்தேவிடுகிறது.

Tuesday, July 17, 2012

ஊரோடிய கதைகள் - கோவா -4

கடற்கரைக்கு சென்றுவிட்டு கப்பல் பயணம் செய்யாமல் வருவதென்பது காதலிக்கு "சைவ முத்தம்" கொடுப்பது போல, நல்லவேளையாக நான் அசைவம்! களைத்துப்போன உடலுக்கு கப்பல் பயணம் ஏற்றதல்ல என்றாலும் ஒருநாள் கூத்துக்கு இந்த வியாக்கியானம் எல்லாம் சரிப்பட்டு வராது என்பதால் துணிந்து கிளம்பிவிட்டோம். நாங்கள் ஏறியது தான் அன்றைய இரவின் இறுதி கப்பல் பயணம். தலைக்கு 200 ரூ. என அரைமணி நேர பயணம், ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டம் முகாந்திரமாய். வேண்டா வெறுப்பாக சுவையாரமற்றுதான் தொடங்கியது இந்த பயணம், அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று உடற்சோர்வு, மற்றொன்று இறுதி பயணமாதலால் யுவதிகள் வெகு குறைவு.