Monday, March 11, 2013

மாற்றம் பெறுகிறதா தமிழ்ச்சமூகம்? - 2

மாற்றம் பெறுகிறதா தமிழ்ச்சமூகம் ? என்ற தலைப்பில் மூவர் தூக்கு பற்றி எழுதிய பதிவு தற்காலத்திற்கும் பொருந்தும் படி உள்ளது.

இந்த மாணவர் தன்னெழுச்சி இன்னும் பெரும் பயன் தர சில முன்னெடுப்புகள் அவசியம், என்னளவில் அவைகளில் முக்கியம் என கருதுவதை பட்டியலிட்டுள்ளேன்.
  • நான் முந்தைய கட்டுரையில் ,சொன்னது போல மாணவர்களின் இத்தகைய போராட்டங்கள் ஆவணபடுத்தப்பட வேண்டும். தனித்தனியே  ஒரே கூரையின் கீழ் போராடுவதை விட, ஒரு குடையின் கீழ் ஒரே குரலாக இவர்கள் ஒருங்கிணைக்க பட வேண்டும்.
  • நடைமுறை சாத்தியமற்ற, பொத்தாம்பொதுவான கோரிக்கைகளை விட்டொழித்து மிகத்தெளிவான, "Accountability" உடன் கூடிய கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைக்க வேண்டும். 
  • 3 கோரிக்கைகள் நிறைவேற்ற பட வேண்டும் எனில், 8 முதல் 10 கோரிக்கைகளை வலியுறித்தி அதில் தங்களுக்கு தேவையான அந்த முக்கிய 3 கோரிக்கைகளில் உறுதியாக இருந்து சாதித்து கொள்வார்கள் அரசியல்வாதிகள். மாணவர்கள் அரசியல்வாதிகளின் இந்த "அரசியலை" கற்றுக்கொள்ள வேண்டும்.  
  • பல்வேறு இடங்களில் சிதறுண்டு கிடக்கும் மாணவர்கள் தங்களை தற்கால இணைய வசதிகளை பயன்படுத்திக்கொண்டு, தங்களை எப்போதுமே இணைப்பில் இருத்திக்கொள்ள வேண்டும்.
  • சட்டக்கல்லுரி மாணவர்களின் உதவியுடன் போராட்டம் இடையிலையே நசுக்கப்பட,நீர்த்துவிட கூடிய சாத்தியகூறுகளை முன்னமே கண்டறிந்து அவைகளை தவிர்ப்பதற்கான முன்னெடுப்புகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
  • பத்திரிக்கையாளர்  சந்திப்பு  முதலிய தங்களின் குரலை வெளிப்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களில் ஓரிருவர் மட்டுமே ஈடுபடுவது பயன்தரும். ஆர்வக்கோளாறு காரணமாகவோ, உணர்ச்சி மிகுதியாகவோ ஒரு சிலர் வெளியிடும் கருத்துக்கள் போராட்டத்தின் திசை பற்றிய தவறான பிம்பத்தை ஏற்படுத்தும்.
  • ஈழம் சார்ந்த பிரச்சனைகளில் மட்டுமல்லாது, தங்களை நேரடியாக பாதிக்கும் கல்வி, பெட்ரோல் / டீசல் விலையேற்றம் உள்ளிட்ட மக்கள் சார் பிரச்சனைகளிலும் தங்கள் கருத்தை, நிலையை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தங்கள் "Credibility" -யை பெருக்கி கொள்வதோடு வெகுசன அரசியலையும் கற்றுக்கொள்ள இயலும்.
  • அரசியல் என்பதே அனைத்து மாணவர்களுக்கும் வடிகால் என்பதல்ல, ஆனால் அரசியல் என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டுமானதல்ல என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
  • எல்லாவற்றிற்கும் மேலாக தாங்கள் கல்வி முடித்து வெளியேறுகையில் தங்களுக்கு அடுத்த மாணவர் தலைவர்களை உருவாக்கி, அவர்களுக்கான பயிற்சியையும் தங்கள் அனுபவத்தையும் ஆவணப்படுத்தி கையளித்து செல்ல வேண்டும். (Reinventing the wheel is stupidity )
மேற்குறிப்பிட்டவைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் மாணவர்கள் தங்களை அரசியல்ரீதியாக தங்களை வடிவமைத்துக்கொள்ள உதவும்.

மாணவர்களின் முன்னெடுப்புகளால் மனம் குளிர்ந்திருக்கும் 
-ரகு 

No comments:

Post a Comment